5 ஸ்டாரோட அண்ணன் வரான் வழிவிடு
முதன்முறையாக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாருதி நிறுவன கார்
சென்னை: மாருதி சுசூகி நிறுவனம் சமீபத்தில் டிஸையர் காரின் புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. பழைய மாடலுடன் ஒப்பிடும்போது தற்போது காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் பெருமளவிலான மாற்றங்களை மாருதி சுசூகி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
டிஸையர் காரின் இந்த புதிய மாற்றத்தை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். விலை, இன்ஜின், மைலேஜ், குறைவான சர்வீஸ், உள்நாட்டு தயாரிப்பு போன்ற காரணங்களினால் பலரும் மாருதி கார்களை விரும்புகின்றனர். பாதுகாப்பை பொறுத்தவரை மாருதி நிறுவன கார்கள் ஜீரோ ரேட்டிங்கையே பெறுகின்றன.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிஸையர் கார் GNCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விற்பனை மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கும் முதல் கார் இதுவாகும்.
இந்தியாவில் முதன்முறையாக டாடா நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பில் 5 ஸ்டார்களை பெற்றது அதன் விற்பனையில் குறிப்பிடத்தக்க உயர்வை கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து மஹிந்திரா, வோல்க்ஸ்வோகன், ஸ்கோடா, ரெனோ போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாப்பில் 5 ஸ்டார்களை பெற கவனம் செலுத்தி வந்தன.
Bharat NCAP இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இனி மாருதி நிறுவன கார்கள் 5 ஸ்டார்களை பெரும் என பலரும் கிண்டல் அடித்த நிலையில், இதுவரை ஸிரோ ரேட்டிங்கில் இருந்த மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களில் முதன் முறையாக GNCAP-ல் 5 ஸ்டார்களை டிஸையர் கார் பெற்றிருப்பது கார் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், மற்ற நிறுவனங்களின் கார் விற்பனையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.