கல்வி

கல்லூரிகளில் உதவி மையம் அமைக்க முதல்வர் உத்தரவு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கங்களில் உதவி மையம் முதல்வரின் உத்தரவின்பேரில் அமைக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள், 52 தொழில்நுட்ப கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.

இவைகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாகவும், பல்வேறு கோரிக்கைகள், சந்தேகங்கங்களை போக்கிக்கொள்ளும் விதமாக மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் எளிதில் அணுகும் விதமாகவும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

கல்லூரி/பல்கலைக்கழகத்தின் பிரதான பகுதியில் இந்த உதவி மையம் அமைக்கப்படும் என்றும், கல்லூரியை பற்றி முழுமையாக அறிந்த அலுவலர்கள் இதில் பணியாற்றுவர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *