நவ.18 வரை தமிழகத்தில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த பகுதி, தொடர்ந்து வட தமிழகம், மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வருகின்ற 18-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தொடர்ந்து பெய்து மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.