அம்பேத்கர் சட்ட பல்கலை.யில் மாதிரி பாராளுமன்ற அமர்வு
சென்னை: 75 ஆவது இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இன்று விமரிசையாக அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் மாதிரி இளைஞர் பாராளுமன்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அப்பல்கலையில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் மற்றும் பல்கலையுடன் இணைந்த இரண்டு அம்பேத்கர் சட்டக் கல்லூரிகளை சேர்ந்த மொத்தம் 80 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்தில் எவ்வாறு பணிகள் நடைபெறும் என்பதை மாணவர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர். முக்கிய அரசியலமைப்பு மற்றும் சட்டப் பிரச்சினைகளில் அர்த்தமுள்ள விவாதங்களில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இதில், பங்கேற்ற மாணவர்கள் தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் பாத்திரங்களை பாராளுமன்ற ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை கடைபிடித்து மிக துல்லியமாக செய்து காட்டியது பலரின் பாராட்டை பெற்றது.