நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளி கட்டிடம் திறப்பு
சென்னை: சென்னையடுத்த மேடவாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மெட்ராஸ் ரவுண் டேபிள் என்னும் பவுண்டேஷன் சார்பில் 1.22 கோடி ரூபாய் செலவில் 8 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி வகுப்பறைக் கட்டிடம், சிறிய நூலகம், சிறிய ஆய்வகம் ஆகியவை கட்டப்பட்டன.
இதனை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சோழிங்கநல்லுர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், மெட்ராஸ் ரவுண் டேபிள் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.