930 மில்லிகிராம் தங்கத்தில் நடராஜர் கோவிலுக்கு தங்கரதம்
சிதம்பரம்: சிதம்பரம் கீழ ரத வீதியில் வசிப்பவர் பொற்கொல்லர் முத்துக்குமரன்(40). இவர் சிறுவயது முதலே தனது தந்தையுடன் இணைந்து தங்க நகை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. வருகின்ற 12ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 930 மில்லிகிராம் தங்கத்தில் 900 மில்லிகிராமில் தங்க ரதமும், 30 மில்லிகிராமில் சொர்ண லிங்கத்தையும் உருவாக்கியுள்ளார் பொற்கொல்லர் முத்துக்குமரன்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தங்கரதம் இல்லாதநிலையில் இந்த தேரினை கோவிலின் உட்பிரகாரத்தில் சுற்றி வர வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார்.

