செஃப் தாமு கேட்டரிங் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் துவக்கம்
சென்னை: சுவையின் சங்கீதம் செஃப் தாமு கேட்டரிங் மற்றும் ஈவென்ட்ஸ் என்னும் நிறுவனத்தை சென்னையில் துவக்கினார் பிரபல சமையற்கலைஞர் செஃப் தாமு.
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது நிறுவனத்தின் லோகோவையும், மெனு விவரங்களையும் வெளியிட்டார் தாமு.
இதுகுறித்து அவர் பேசுகையில், தற்போது துவங்கியுள்ள தனது நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப உணவு தயாரித்து வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு உணவுடன் சேர்த்து திருமண மண்டப மேடை அலங்காரம், இன்னிசை கச்சேரி, போட்டோ, வீடியோ உள்ளிட்ட சேவைகளையும் சேர்த்து வழங்கவுள்ளோம்.
இதற்காக அவரவர்களின் வசதிக்காக தனித்தனியாக Bronze, Silver, Gold, Platinum போன்ற பேக்கஜ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Bronze என்பது குறைந்த விலை கொண்ட பேக்கேஜாகவும், Platinum என்பது வசதி படைத்தவர்களுக்காக உண்டாக்கப்பட்டதாகவும் இருக்கும்.
மேலும், தற்போது சைவ உணவு வகைகள் மட்டும் பரிமாறப்படும், அசைவ உணவுகள் தயாரிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
கைதேர்ந்த சமையற்கலைஞர்களை கொண்டு உணவு தயாரிப்படுவதோடு, அனைத்து நிகழ்சகளிலும் தானும் கலந்துகொள்வேன் என்றும் கூறினார்.
தனது நண்பர்களான வெங்கடேஷ் பட், மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் தன்னுடைய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்ததாக அவர் கூறினார்.

