திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் வாய்ப்பு: கனிமொழி
நெல்லை | ஜனவரி 30, 2026
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், வணிகர் சங்கங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு பெரும் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இருப்பதாகவும், கூட்டணி குறித்த இறுதி முடிவை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறினார். காங்கிரஸ்–திமுக கூட்டணி தொடர்ந்து சுமூகமாக நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

