சென்னையில் நடைபெறவுள்ள சிறுவர்களுக்கான சதுரங்க போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மயிலாப்பூர் திருவிழாவின் ஒரு பகுதியாக பிரபல நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் சிறுவர்களுக்கான சதுரங்க (செஸ்) போட்டியினை வருகின்ற ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.
மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி ஐயர் மகளிர் மேனிலைப் பள்ளியில் அந்த இரு தினங்களிலும் காலை 8 மணி முதல் 11 மணி வரை 15-வது செஸ் போட்டியாக இது நடைபெறவிருக்கிறது.
8, 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட பிரவுகளில் உள்ள சிறார்களுக்காக இந்த சதுரங்கப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள சிறுவர்களின் பெற்றோர்கள், தங்களது குழந்தையின் பெயர், பிறந்த தேதி மற்றும் பெற்றோர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகிய தகவல்களை மின்னஞ்சல் வழியாக sfcorpcomm@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புவதன் மூலம் பங்கேற்பிற்கு பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

