சினிமா

பாடகி சுசித்ரா மீது இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா குற்றச்சாட்டு

இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா தற்போது உருவாக்கி வரும் தனது “டைட்டானிக் சன்னி சன்னி” என்னும் ஆல்பத்தில் பாடகி சுசித்ராவை பாட வைத்து, என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்

பாடலை பாடிய சுசித்ரா, பாடலின் பிரமோஷனுக்கு எந்த வித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்று இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் கரண் நடித்த ‘கந்தா’ என்ற படத்திற்கு இசையமைத்தவர் சக்தி ஆர் செல்வா. உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்த அவர், மீண்டும் சினிமாவில் இசை அமைப்பதற்காக,
“டைட்டானிக் சன்னி சன்னி” என்ற இந்த இசை ஆல்பத்தை தானே எழுதி, இசையமைத்து, சுசித்ராவுடன் டூயட் பாடினார்.

ஆனால் பாடலின் பிரமோஷனில் எனது பெயரை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றும், தனக்கு பெண்கள் இடையே மிகப்பெரிய நல்ல பெயர் இருக்கிறது. அந்தப் பெயரை நீங்கள் ‘அறுவடை செய்யக்கூடாது’ என பாடகி சுசித்ரா கூறியதாக இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், கடந்த இரண்டு வருடங்களாக சுசித்ராவிற்கு சரியான வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் நான் அவர் குரலின் மீது வைத்திருந்த நம்பிக்கையில், அவரை பாட வைத்தேன். ஆனால் அவர் தனது புகழை, நான் அறுவடை செய்யக்கூடாது என பேசி, என்னை மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். பாடகி சுசித்ரா சில நேரங்களில் அம்பியாகவும், திடீரென அந்நியனாகவும் மாறுகிறார் எனறு குற்றஞ்சாட்டினர் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *