நவ்.11-ல் உயர்மட்ட குழு கூட்டம்? பாஜக மறுப்பு
சென்னை: பாஜக-வில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கையில் போதுமான முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் டெல்லி வட்டாரங்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதற்காக நவம்பர் 11 ஆம் தேதியன்று பாஜக தமிழக தலைமையகமான கமலாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் உயர்மட்டகுழு கூட்டம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக பாஜக ஊடக பிரிவின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இதுபோன்ற உயர்மட்டகுழு கூட்டம் அல்லது நிர்வாகிகள் கூட்டம் நடத்த நவம்பர் 11-ஆம் தேதியன்று திட்டம் எதுவும் இல்லை என்றும், தவறான தகவலை வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.