நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு சவூதி அரேபியா நாடு பரிந்துரைத்துள்ள ஃபெங்கால் என்னும் பெயர் வைக்கப்படவுள்ளது.
தற்போது வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகம், இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் வருகின்ற 3 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.